புதுவை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததையடுத்து புதுவையிலும் அதேபோன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் புதுவையிலும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களிலும் இன்று இரவு அல்லது நாளை காலை பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment