Connect with us

‘பீஸ்ட்’ பட டிக்கெட் விலையை 3 மடங்கு உயர்த்த அனுமதி… அரசு எடுத்த திடீர் முடிவு!

பீஸ்ட்

பொழுதுபோக்கு

‘பீஸ்ட்’ பட டிக்கெட் விலையை 3 மடங்கு உயர்த்த அனுமதி… அரசு எடுத்த திடீர் முடிவு!

‘பீஸ்ட்’ பட டிக்கெட் விலையை 3 மடங்கு உயர்த்த அனுமதி… அரசு எடுத்த திடீர் முடிவு!

பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை முதல் 5 நாட்களுக்கு 3 மடங்கு வரை உயர்த்திக் கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு விருந்தாக ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மட்டும் 800 முதல் 1000 தியேட்டர்களில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பீஸ்ட் பட டிக்கெட் விலையை ஏற்றிக்கொள்ள புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை முதல் 5 நாட்களுக்கு 3 மடங்கு வரை உயர்த்திக் கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. வரும் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு டிக்கெட் விலையை ஏற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இதுபோல் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது கிடையாது.

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய்யை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக விஜய்யை சந்தித்ததாக ரங்கசாமி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில், விஜய் உடனான சந்திப்பும், அவரது படத்திற்கு முதன் முறையாக புதுச்சேரி அரசு கொடுத்துள்ள சலுகையும் சோசியல் மீடியாவில் பல விவாதங்களை கொண்டு வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top