கோவாக்சின் மட்டுமே செலுத்த வேண்டும்! சிறார்களுக்கான தடுப்பூசி-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்தியாவில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கான முன்பதிவு புத்தாண்டு தினத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும் இன்று காலை தகவல் வெளியானது. இந்த நிலையில் சிறார்களுக்கான தடுப்பூசி குறித்தான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி 2007 அல்லது அதற்கு முன் பிறந்த சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரை சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்தி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது முப்பத்தி ஒன்பது வாரம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 60 வயது ஆனவர்கள், இணைய நோய் உள்ளோர் மருத்துவரின் அறிவுரைப்படி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் அமலாகிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment