பொதுப் பிரிவு மருத்துவ கலந்தாய்வு பட்டியல் வெளியீடு; நாளை மறுநாள் முதல் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
நேற்றைய தினம் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதன்படி நேற்று மாற்றுத்திறனாளிகள், ராணுவ அதிகாரிகளின் வாரிசுகள் போன்றவற்றுக்கான கலந்தாய்வில் 71 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பியது.
இன்றைய தினம் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு காண கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க விதமாக இன்றைய தினம் 61 வயது நிரம்பியுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் தான் அரசு பள்ளியில் முழுவதும் படித்தேன் என்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு 249 ஆவது இடத்தினை பிடித்துள்ளதால் கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அண்மை தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் 710 முதல் 410 வரையிலான மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
