Connect with us

தேர்வர்களே அலர்ட்…!! நளை கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு;;;

tnpsc exam 1

தமிழகம்

தேர்வர்களே அலர்ட்…!! நளை கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு;;;

நாளைய தினத்தில் தமிழகம் முழுவதும் குரூப் 4 நடைபெற இருப்பதால் தேர்வு மையங்கள் முழுவீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 7000 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நாளை நடைப்பெறவுள்ளது. அதேசமயம் இந்த தேர்வுகளுக்கு சுமார் இருபத்தி இரண்டு லட்சம் பேர் எழுதுவதாக கூறப்படுக்கிறது.

இந்நிலையில் 7500 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வுக்கான அனைத்து நெறிமுறைகளும் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு தேர்வு அறைகளில் பதிவு எண்கள் எடுக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தேர்வர்கள் கடைபிடிக்கவேண்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை தேர்வு எழுதும் தேர்வர்கள் 8.30 மணிக்கு தேர்வு அறைக்கு செல்ல வேண்டும் என்றும் 9 மணிக்கு ஓ.எம்.ஆர் தாள்கல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கல் வெளியேற கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செல்போன்கள், இதர பொருட்கள் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை ஓ.எம்.ஆர் தாள்களில் இரண்டு இடங்களில் பதிவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது இடதுகை பெருவிரல் ரேகையை ஓ.எம்.ஆர் தாள்களில் தேர்வு முடிந்த பின்னர் பதிவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் தாள்களில் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் பதிவிட கூடாது என கூறப்பட்டுள்ளது.

ஓஎம்ஆர் தாள்களில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு கட்டத்தை தவிர ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களை விடைகளாக குடிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடை தெரியாத கட்டத்திற்கு என்கிற கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top