Connect with us

பொதுமக்களின் பணம் வீணாக கூடாது – ஐகோர்ட் கிளை காட்டம்!!

ஐகோர்ட் மதுரை

தமிழகம்

பொதுமக்களின் பணம் வீணாக கூடாது – ஐகோர்ட் கிளை காட்டம்!!

பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வேலங்குடி கிராமத்தில் ஆலங்குளம் கண்மாயில் உள்ள அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

குறிப்பாக ஆலங்குளம் கண்மாயை நம்பி 200 ஏக்கம் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அம்மா தேசிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவதால் சுற்றியுள்ள விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பு இதுபோன்ற விளையாட்டு அரங்கம் அமைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவானது நீதிபதி மகாதேவன், சத்தியநாராயணன் முன் அமர்வுக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டரங்கம் எவ்வாறு கட்டப்பட்டது? இதற்கான தொகை எவ்வளவு செலவிடப்பட்டது? என்ற கேள்வியை நீதிபதிகள் முன் வைத்தனர்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளையாட்டு அரங்கம் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியது. பின்னர் பேசிய நீதிபதிகள் பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தனர். அதோடு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top