10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீடு!!

தமிழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

நடப்பாண்டில் சுமார் 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருப்பதாகவும், வருகின்ற 2023 ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை… வானிலை மையம் தகவல்!

இந்நிலையில் வருகின்ற மார்ச் 13.03.2023 தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையில் பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையில் 11ம் வகுப்பு மாணவர்களு பொதுத்தேர்வு நடைப்பெறும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

மேலும், ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment