தற்போது நம் தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை ஆனது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய பல்கலைகழகம் சில முக்கிய அறிவிப்பு கூறியிருந்தது. அதன்படி மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வினை பொறுத்துதான் அமையும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வினை எடுத்துக் கொள்ளாது என்றும் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய பல்கலை கழகங்களுக்கும் நுழைவுத்தேர்வு மேற்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்துவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இந்த மாதம் 31ம் தேதி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனால் மார்ச் 31ஆம் தேதி நடைபெறுகின்ற போராட்டத்திற்கு திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.