மீண்டும் தலைதூக்கும் பப்ஜி, ஃப்ரீ பையர் – ஐகோர்ட் கிளை அதிரடி!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி, ஃப்ரீ பையர் போன்ற விளையாட்டுகள் இன்று வரையில் இளைஞர்கள் மத்தியில் விளையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஃப்ரீ பையர் விளையாடிய பெண் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சூழலில் ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது VPN செயலி தொடர் பயன்பாட்டில் இருப்பதாக கூறியது.

10-ம் வகுப்பு மாணவிக்கு குவா குவா… அண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு..!!!

அதோடு இத்தகைய ஆப் பயன்படுத்துவது தொடர்பாக யூடியூப் மற்றும் கூகுளில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்போது பேசிய நீதிபதிகள் இளைஞர்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கினால் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இதனிடையே யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!!

மேலும், VPN செயலிகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment