திமுக அரசியலில் பரபரப்பு.. !! பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காரை மறித்து காலணி வீச்சு..!!

மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லஷ்மணன் உடல் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அவரது உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசியல் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்தபோது அவரது கார் மீது காலணி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் காலனி வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், நிதி அமைச்சர் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் பாஜகவினர் லக்ஷ்மணன் உடலுக்கு மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அரசு மரியாதை செய்யும் இடத்திற்கு பாஜகவினர் எவ்வாறு வரலாம் என கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment