’வாரிசு’, ‘துணிவு’ வசூலை முந்திய ‘பொன்னியின் செல்வன் 2’ வசூல்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்று கூறப்படும் அஜித் மற்றும் விஜய்யின் படங்களை விட ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் வசூல் முதல் நாளில் அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான விஜய்யின் வாரிசு திரைப்படம் முதல் நாளில் 47 கோடியும் அஜித்தின் துணிவு 41 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் ’பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் முதல் நாளில் 65 கோடி வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

thalapathy vijay varisuதமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களின் படங்களை விட ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் அதிக அளவு வசூல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வெளியான பொன்னியின் செல்வன் 2  திரைப்படம் உலகம் முழுவதும் 2800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது என்பதும் முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் 35 கோடியும் வெளிநாடுகளில் 30 கோடியும் என மொத்தம் 65 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 21 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

thunivu ajithகேரளாவில் 8 கோடியும், ஆந்திரா தெலுங்கானாவில் நான்கு கோடியும் வசூல் செய்துள்ளது. இருப்பினும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை முதல் நாள் வசூல் குறைந்துள்ளது என்றும் அதற்கு முக்கிய காரணம் அதிகாலை காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படாதது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் முதல் வார இறுதியில் இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்றும் , முதல் பாகம் வசூல் செய்த 500 கோடியை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் திரை உலகை பொருத்தவரை மிக அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக பொன்னியின் செல்வன் நிச்சயம் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...