இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கல்கி எழுதிய வரலாற்று நாவலைத் தழுவி உருவான படம் ‘பொன்னியின் செல்வன்’ . இப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதே போன்று டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வருகின்ற செப்டம்பர் 30 ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் படி, நாளைய தினத்தில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விழாவின் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.