சிறுவாணி: ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்குக! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்;
இந்தியாவிலேயே மிகவும் ருசியான தண்ணீராக காணப்படுவது சிறுவாணி தண்ணீர்தான். ஏன் இந்தியா மட்டும் இல்லாமல் உலகத்திலேயே என்றும் கூட கூறலாம். இதுகுறித்து கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கோவை மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க சிறுவாணியில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். சிறுவாணி அணையில் இருந்து ஆண்டுதோறும் 1.30 டிஎம்சி க்கு மிகாமல் வழங்க இரு மாநில அரசுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டிஎம்சி இலிருந்து 1.128 டிஎம்சி அளவுக்குத்தான் தண்ணீர் வழங்கியுள்ளது என்று கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஒப்பந்தம் படி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், சிறுவாணி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
