மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்குக!: ஓபிஎஸ்
பொதுவாக கனமழை பெய்தால் பலருக்கும் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அனைத்து நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் நிரம்பும். அதோடு மட்டுமில்லாமல் பூமியும் உஷ்ணத்தை தணித்து உள்ளதாக காணப்படும்.
இவ்வாறு கனமழையால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கனமழை ஓர் நஷ்டத்தை கொடுப்பதாகவே அமையும். அதுவும் அவர்களால் சேமித்து வைக்கப்படும் பயிர்கள், நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தால் முழுவதும் நாசம் அடைந்து விடும். அதுவும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெய்த மழையால் பயிர்கள் பெரிதளவில் நாசமடைந்தன.
இதற்காக அப்போது எதிர்க்கட்சியினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பார்கள். அந்த வகையில் எதிர்க் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க திராவிட முன்னேற்றக் கழக அரசை வலியுறுத்துகிறேன் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க அவற்றை சேமிப்புக் கிடங்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
