உங்கள நினைச்ச பெருமையா இருக்கு…! இந்த வயதில் சாதித்த தந்தைக்கு பிரபல நடிகர் புகழாரம்….!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி 1987 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தற்போது 83 வயதாகும் ஜி.கே.ரெட்டியை பார்த்தால் விஷாலின் தந்தை என்று யாருமே கூறமாட்டார்கள்.

விஷால்  தந்தை

ஏனெனில் இந்த வயதிலும் அவர் உடலை அவ்வளவு கட்டுகோப்பாக வைத்திருப்பார். வயதான நபர் என யாருமே அவரை கூற முடியாது விஷாலின் தந்தையா அல்லது அண்ணனா? என கேட்கும் அளவிற்கு அவரது தோற்றம் இருக்கும். அதுமட்டுமல்ல விஷாலின் தந்தை ரெட்டி இந்த வயதிலும் யோகா செய்வது, உடல் தகுதி போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறாராம்.

அந்த வகையில் விஷாலின் தந்தை சமீபத்தில் சென்னை மாநகர மாஸ்டர்ஸ் அத்தலட் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று பரிசு வென்றுள்ளார். அவர் பரிசு பெறும் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் விஷால் தந்தைக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியிருப்பதாவது, “என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் இன்ஸ்பிரேஷனுக்கும் மேல். இந்த வயதில் டிராக்கில் ஓடி பதக்கம் வெல்வது பெரிய சாதனை..way to go… நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாம் என்னை பொறாமைப்பட வைக்கிறது . நான் எனது பள்ளிக்கால ஸ்போர்ட்ஸ் நாட்களை மிஸ் செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் தந்தை தயாரிப்பாளர் மட்டுமல்ல. இவர் ஏற்கனவே ராட்சசி, ரிச்சி, செம போத ஆகாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதுதவிர மேலும் சில புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலும் டிராக்கில் ஓடி பதக்கம் வென்றுள்ள விஷாலின் தந்தை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment