‘மின் கட்டண உயர்வு’… முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் அமுமுக!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி தமிழகத்தில் வரும் நாட்களில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்வாரிய நலத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

மேலும் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் கூறியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர் மேலும் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்களே இதுகுறித்து கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

இவ்வாறு உள்ள நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது. மின் கட்டணம் உயர்வை திரும்ப பெறக் கூடிய சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே டிடிவி தினகரன் தலைமையில் அமமுக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி  சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொத்து வரி, மின் கட்டணம் முன்னேற்றவற்றை உயர்த்துவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment