கலவரத்தின் உச்சம்..; ராஜபக்சேவின் வீட்டை எரித்த போராட்டக்காரர்கள்..!!

நேற்றைய தினத்தில் இருந்து இலங்கையில் பெரும் கலவரம் நிலவுகிறது. நேற்றையதினம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா  செய்ததன் விளைவாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது.

இதில் ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆளும் கட்சி எம்பி ஒருவர் கலவரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் போராட்டக்காரர்கள் ராஜபக்சே குடும்பத்தின் வீட்டை தீ வைத்து எரித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

https://tamilminutes.com/why-the-peaceful-protest-ended-in-riots/

அதன்படி இலங்கை ஹம்பன் தோட்ட அருகே ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமான பழைய வீடு ஒன்று உள்ளது. இந்த பழைய வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

மெதமுலானாவின் ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டக்காரர்களை, ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கியதால் பல இடங்களில் ஆட்சியாளர்களின் வீடுகளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment