
Tamil Nadu
துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சஸ்பெண்ட் !! வைகோ அதிரடி..
மதிமுகவில் துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையின் மூலமாக கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையின் மூலம் வைகோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிவகங்கை மாவட்ட செயலாளர் சே. செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் , விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம். சண்முகசுந்தரம் ஆகியோர் மாவட்ட பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக வைகோ அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தபோது கட்சியின் தலைமை செயலாளராக துரை வைகோவை நியமிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியின் மீது ஒழுங்கு நடவடிக்கைக் விசாரணை குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என வைகோ கூறியுள்ளார்.
