
செய்திகள்
அதிபர் நீச்சல் குளத்தில் நீந்தும் போராட்டக்காரர்கள்; உணவையும் விட்டு வைக்கவில்லை!!
இன்றைய தினம் காலையில் மீண்டும் இலங்கையில் மக்களிடையே போராட்டம் நிகழ்ந்தது. இதனால் தலைநகர் கொழும்புவில் அசம்பாவிதங்கள் ஆங்காங்கே நடந்தது. மேலும் போராட்டக்காரர்கள் சாலையில் வந்து கொந்தளித்தனர்.
அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் அவர்கள் அனைவரும் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோசமிட்டனர்.
இந்த நிலையில் இதையெல்லாம் தாண்டி அவர்கள் அதிபரின் அதிகாரப்பூர்வமான மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். இதனை அறிந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை விட்டு தப்பி ஓடினார்.
மேலும் அங்கு சென்ற போராட்டக்காரர்கள் அதிபரின் நீச்சல் குளத்தில் குதித்து நீந்தி உள்ளனர். மேலும் அங்குள்ள பொருள்களை எல்லாம் சூறையாடி கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அதிபரின் மாக்கைக்குள் இருந்த உணவுப் பொருட்களையும் உண்டு மகிழ்கின்றனர்.
மேலும் அதிபர் கொடியை அகற்றிவிட்டு அங்கு இலங்கை கொடியை ஏற்றினர். இத்தகைய போராட்டக்காரர்களுக்கு பொதுமக்களும் தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டு வருவதாகவும் தெரிகிறது. மேலும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் போராட்டக்காரர்களுக்கு உதவியை செய்து கொண்டு வருகின்றனர்.
