சிறையில் சொகுசு ஏற்பாடுகளுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கு! சசிகலா, இளவரசி முன்ஜாமீன்!!

தற்போது அதிமுக மக்களால் சின்னம்மா என்று அழைக்கப்படுபவர் சசிகலா. அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி ஆவார். இந்நிலையில் அவர் மரணத்திற்குப் பின்பு சின்னம்மா என்றழைக்கப்படும் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரோடு சேர்த்து இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவரும் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் சிறையில் அவருக்கு சொகுசு ஏற்பாடுகளை செய்ய லஞ்சம் வழங்கியதாக தற்போதுவரை புகார் எழுந்து கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் தலா மூன்று லட்சம், இரண்டு தனி நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிக்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் தந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment