Connect with us

சொத்து வரி உயர்வை தவிர்க்க முடியாது! இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்;

Property Tax

Tamil Nadu

சொத்து வரி உயர்வை தவிர்க்க முடியாது! இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்;

சொத்து வரி உயர்வை தவிர்க்க முடியாது! இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்;

கடந்த சில நாட்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் சொத்து வரியானது திடீரென்று உயர்த்தப்பட்டது. அதுவும் குறிப்பாக மார்ச் 31-ஆம் தேதி இறுதியில் சொத்துவரி திடீர் என்று எதிர்பாராத விதமாக அதிகரிக்கப்பட்டது.

அதுவும் குறிப்பாக சென்னையில் சொத்துவரி ஆனது 50% முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதற்காக நேற்றைய தினம் அதிமுக சார்பில் தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி நேற்று சொத்து வரியை கண்டித்து சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் சட்டமன்றம் கூடியது. இந்த சட்டமன்றமானது மானிய கோரிக்கைகள் மீது விவாதம் புரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்த படி என்று எதிர்க்கட்சியினர் சொத்துவரி குறித்து கேள்விகளை கேட்க முதலமைச்சர் பதிலளித்தார்.

அதன்படி தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்காது என்றும்  ஸ்டாலின் கூறினார். சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை ஏழை நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

58% வீடுகளுக்கு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறினார்.83 சதவீத வீடுகளுக்கு 25 முதல் 50 சதவீத சொத்துவரி உயர்ந்துள்ளதாகவும் கூறினார். 7 சதவீத வீடுகளுக்கு 100 முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்ந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

உள்ளாட்சி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேடி வருவதாகவும் அவர் கூறினார். 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்றும் கூறினார். சொத்து வரி உயர்வை தவிர்க்க முடியாதது மாநிலத்தின் வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்துவரி 200 300 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top