தமிழகத்தில் சொத்து வரி உயர்வு – பிற மாநிலங்ககளில் சொத்து வரி எவ்வளவு..?
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச சொத்துவரி 810 லிருந்து 1215 ரூபாய்யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு மும்பையில் குறைந்தபட்ச சொத்துவரி 2157 ரூபாய்யகவும் பெங்களூரில் 3466 ரூபாய்யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல கொல்கத்தாவில் 3510 ரூபாய்யாகவும், பூனேவில் 3924 ரூபாய்யாகவும் உள்ளது. சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிகபட்ச சொத்துவரி 3240 லிருந்து 4860 ரூபாய்யாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு மும்பையில் அதிகபட்ச சொத்துவரி 84583 ரூபாய்யாகவும் பெங்களூரில் 8660 ரூபாய்யாகவும், கொல்கத்தாவில் 15984 ரூபாய்யாகவும் பூனேவில் 17112 ரூபாய்யாகவும் உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 600 சதுரடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச சொத்துவரி 204 லிருந்து 255 ரூபாய்யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு லக்னோவில் குறைந்தபட்ச சொத்துவரி 648 ரூபாய்யகவும் உள்ளது. மேலும், பிற மாநிலங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் இந்த சொத்து வரி ஒப்பீடுப்பட்டுள்ளது.
