
பொழுதுபோக்கு
சொத்து பிரச்சினை: நடிகர் பிரபுவுக்கு எதிராக வழக்கு!!
மறைந்த நடிகர் சிவாஜி குடும்பத்தில் நிலவும் சொத்து பிரச்சினை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜிக்கு பிரபு, ராம்குமார் என்ற இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவாஜி மறைவிற்கு பிறகு அவருக்கு சொந்தமான 270 கோடி சொத்துக்கள் முறையாக நிர்வகிக்கவில்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே போல் வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வருவதாக அவருடைய மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் காரணமாக தந்தை சொத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு சொத்தை சமமாக பிரித்து தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு தெரியாமல் பிரபு. ராம்குமார் சொத்துக்களை விற்பனை செய்ததாகவும் இன்று விற்பனை பத்திரம் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே ஆயிரம் சவரன் தங்க நகைகள், 500 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை அபகரித்துக்கொண்டதாகவும், சாந்தி பெயரில் இருந்த 82 கோடி சொத்துகளை இருவரும் தங்களுடைய பெயருக்கு மாற்றி கொண்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
