வெறும் 6 வருஷத்துல 18 மடங்கு அதிகரித்த சொத்து! ஆடிப்போன லஞ்ச ஒழிப்புத்துறை!!

தற்போது நம் தமிழகத்தில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் கட்சி உறுப்பினர்கள் இல்லத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுவும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வீட்டில் தொடர்ந்து அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை

அதன் வரிசையில் அதிமுக நிர்வாகியான இளங்கோவன் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்றது. இதில் சோதித்த லஞ்ச ஒழிப்புத்துறை என்று ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். ஏனென்றால் இளங்கோவன் கடந்த ஆறு வருடங்களில் அவரின் சொத்தானது 18 மடங்கு அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது.

இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் 3.78 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆறு ஆண்டுகளில் இளங்கோவனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 18 மடங்கு உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

திமுக ஆட்சியிலேயே வருமான வரித்துறை சோதனை ஆளானவர் இந்த இளங்கோவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ள இளங்கோவன் அதிமுக முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பல கோடி ரூபாயை மாற்றியதாகவும் இளங்கோவன் மீது புகார் உள்ளது. அவரோடு மட்டுமில்லாமல்  கரூரில் உள்ள இளங்கோவன்  சகோதரி  இந்திராணி கலியபெருமாள் வீட்டில் கிட்டதட்ட 5 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை 12 மணி வரை நடைபெற்றது. இதில் இந்திராணி வீட்டில் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment