ஜாதி – மதம் இல்லையென சான்று வழங்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப பொதுமக்களிடன் மாற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாதி – மதம் இல்லை என்ற சான்றிதழ் ஒரு தம்பதியினர் பெற்றனர்.

இத்தகைய நிகழ்விற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர் சாதி – மதம் இல்லை என சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்து இருந்தார்.

இருப்பினும் தாசில்தார் இதற்கு காலதாமதம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதி அம்பத்தூர் தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் படி, சாதி-மதமற்றவர் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்று வழங்க வேண்டும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment