
பொழுதுபோக்கு
பஞ்சதந்திர நண்பர்கள் வெளியிட்ட விக்ரம் படத்தின் ப்ரோமோ !! வேற லெவல் ஐடியா !!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது.
விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருப்பதால், படத்திற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியீட தொடங்கியது. அதன்படி, இன்று தான் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ப்ரோமோவில் 20 வருடத்திற்கு முன்பு கமல் நடித்த பஞ்சதந்திரம் படத்தில் அவரது நண்பர்களான ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் உள்ளிடடோர் இடம் பெற்றுள்ளனர். பஞ்சதந்திரம் படத்தில் ஐவரின் லீட்டிக்கு அளவே இல்லை அந்த காமெடியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள் .
தற்சமயம் யூகி சேது விக்ரம் படத்தின் விளம்பரத்தை பார்த்து தவறுதலாக புரிந்து தன் நண்பரான ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம் ஆகியோருக்கு போன் கால் செய்வது போலவும் ஒரு வீடியோவை எடுத்து அதனை விக்ரம் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் .
ஹீரோவான பாஜக அண்ணாமலை!!.. டீசர் வெளியீட்டில் குழப்பம் !!
இந்த ப்ரோமோவிற்கான ஐடியாவை கமல் தான் செய்துஉள்ளார், ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு படத்தை படத்தை விளம்பரம் செய்ய கமலிடம் கத்துக்கோங்க என மற்ற திரை துறையினருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
Glad to see my most favourite #Panchatanthiram gang back in action ❤️..
It's not Ram it's #Vikram ????https://t.co/Y9ZLIv9BGa— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 27, 2022
