உகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழகத்தின் முக்கிய தலைவர்கள்?
இன்றைய தினம் உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த உகாதி பண்டிகை ஆனது தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களின் புதுவருட பண்டிகையாக காணப்படுகிறது. இந்நிலையில் இதற்கு தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புது வருடமான உகாதி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பையும், நல்லிணக்கத்தையும் பரப்பி இந்தியாவை வளமான நாடாக மாற்ற உறுதியுடன் ஒன்றுபடுவோம் என்றும் ஆளுநர் ரவி கூறினார்.
நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க ஒன்றிணைந்து நிற்பது வரலாற்றுத் தேவை என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த புகை திருநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
