Connect with us

இனி கலப்படம் இருக்காது; கோவில்களிலேயே திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டம்!!

sekar babu in temple

தமிழகம்

இனி கலப்படம் இருக்காது; கோவில்களிலேயே திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டம்!!

இனி கலப்படம் இருக்காது; கோவில்களிலேயே திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டம்!!

நம் தமிழகத்தில் கோவில்களை மேம்படுத்த இந்து சமய அறநிலையத் துறை உள்ளது.

இதில் தற்போது அமைச்சராக உள்ளார் சேகர்பாபு. அவர் நாள்தோறும் கோவில்கள் மற்றும் அறநிலையத்துறை போன்றவற்றின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை அறிவித்து கொண்டு வருகிறார்.

அந்த படி இனி கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 8 கோவில்களில் ரூபாய் 3 கோடி செலவில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் நாசர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். அதன்படி திருவண்ணாமலை, மதுரை, சமயபுரம் உட்பட 8 பெரிய கோவில்களில் திருநீர் மற்றும் குங்குமம் தயாரிக்கும் திட்டம் இன்றைய தினம் தொடங்கியுள்ளது. இந்த திருநீறு, குங்குமம் பிரசாதங்களில் ரசாயனம் கலக்கப்படுவதால் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top