இந்திய ரயில்வே துறை தண்டவாளம் அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரயில்வே வாரிய தலைவர் அணில் குமார் லோகோ ஜி இதனை குறிப்பிட்டுள்ளார். இந்திய ரயில்வே துறை இதன் ஒரு பகுதியாக தண்டவாளம் அமைத்தல் பராமரிப்புக்கான இயந்திரங்களை கொள்முதல் செய்தல் போன்ற பாரம்பரிய முறைக்கு பதிலாக இந்த பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அனில்குமார் தெரிவித்துள்ளார்.
இரயில்வே தண்டவாளங்களை அமைக்கும் இயந்திரங்கள் 10 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை ஆவதாகவும் இதற்கு பெரும் நிதி தேவையாக உள்ளது என்றும் அணில் குமார் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த பணிகளை அதற்கான இயந்திரங்கள் வைத்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார் .
அதிதீவிர புயலாக மாறி பலத்த வேகத்தில் நகர்ந்து வரும் Mocha புயல்!
அடுத்த ஏழு ஆண்டுகளில் 2000 விரிவுபடுத்தப்பட்ட தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் அதற்கான பராமரிப்பு இயந்திரங்கள் தேவை என என்றும் ரயில்வே வாரிய தலைவர் அனில்குமார் சுட்டிக்காட்டி உள்ளார்.