கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாட தடை!: டெல்லி மாநில அரசு;

இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று வேகம் அதிகமாகவே காணப்படுகிறது.

தினந்தோறும் அங்கு புதிதாக ஒமைக்ரான்  தொற்று பாதிப்பு உருவாகிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த டெல்லி மாநில அரசு கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. அதோடு திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், 200 பேருக்கு மேல் விருந்துகளில் பங்கேற்க கூடாது எனவும் டெல்லி மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment