News
ஐகோர்ட்டு உத்தரவுக்கே தடையா? உத்தர பிரதேசத்தில் ஊரடங்கிற்கு!
இந்தியாவில் உச்சநீதிமன்றம் ஆனது டெல்லியில் உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றமும் உள்ளது. தமிழகத்தில் உயர் நீதிமன்றம் ஆனது சென்னையில் உள்ளது. மேலும் இதுபோன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் காணப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்றங்கள் பல்வேறு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பிக்கின்றன. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றம் அலகாபாத் பகுதியில் உள்ளது. இந்த அலகாபாத் ஹைகோர்ட் ஆனது உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அலகாபாத் ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தடை விதித்துள்ளார். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆனது முன்னதாக பிராயக்ராஜ், லக்னோ வாரணாசி கான்பூர் கோரக்பூரில் ஊரடங்கு பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
ஆனால் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. உத்தரப் பிரதேச அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் மீது தடை விதிக்கும் அதிகாரம் ஆனது உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உச்சநீதிமன்றம் ஆனது அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவினை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
