ரத்தத்தில் ஓவியம் வரைந்து காதல் பரிசு தர தடை!!:அமைச்சர்;

பிப்ரவரி மாதம் ஆரம்பித்து விட்டாலே அந்த மாத முழுவதும் காதலர்களின் மாதம் என்று கொண்டாடப்படும் அளவிற்கு காணப்படும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் புது புது விதமான செயல்களை காதலர்கள் செய்து கொண்டு வருவார்கள்.

அதிலும் குறிப்பாக சாக்லேட் டே, ரோஸ் டே, கிப்ட் டே என ஒரு ஒரு நாளும் ஒரு விதமான காதலை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக காதல் என்றாலே பல பரிசு பொருட்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும்.

அதிலும் உணர்ச்சிமிக்க காதலர்கள் பலரும் தனது காதலன், காதலியின் உருவத்தை வரைபடமாக வரைந்து பரிசளிப்பார்கள். ஒரு சிலர் அதையும் தாண்டி ரத்தத்தால் அவர்களின் உருவத்தை வரைந்து பரிசளிப்பார்கள்.

இவை பார்ப்பதற்கு காதலை உணர்த்தும் விதமாக இருந்தாலும் தவறான செயலாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் இவ்வாறு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி ரத்தத்தில் ஓவியம் வரைந்து காதல் பரிசு தர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து கொடுக்கும் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.