Connect with us

ஈபிஎஸ்க்கு சாதகமான உத்தரவு! நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை!!

palaniswai

செய்திகள்

ஈபிஎஸ்க்கு சாதகமான உத்தரவு! நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை!!

ஜூலை 11ம் தேதி அதிமுகவில் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பொதுக்குழு எதிரான வழக்கு நாளைய தினம் விசாரணை வரவுள்ளதாக தெரிகிறது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கு நாளைய தினம் மதியம் விசாரணை செய்யப்படும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளார். பொதுக்குழு குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது,

வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார். நீதிமன்றம் தலையிட தேவையில்லை, அவசியமும் இல்லை என்று இபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

இபிஎஸ் எதிராக சென்னை ஹை கோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடைவித்துள்ளது. இபிஎஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி உத்தரவு பிறப்பித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை வரவிருந்த நிலையில் இபிஎஸ் மீதான வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

உட்கட்சி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top