
Tamil Nadu
அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளுக்கு தடை..!!
தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அறப்போர் இயக்கம் மானநஷ்ட வழக்கு கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி. இன்புரோ மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். தனி நீதிபதி விசாரிக்கும் 3 வழக்குகளை ரத்து செய்யக் கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
மேலும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கே.ஜி.பி. இன்புரோ மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் டெண்டர் பெற்றதில் நிறுவனங்கள் முறைகேடு என்று அறப்போர் இயக்கம் கூறியிருந்தது. கூகுள், முகநூலில் அறப்போர் இயக்கம் பதிவிட்ட கருத்துக்காக தலா ஒரு கோடி கேட்டு 3 வழக்குகள் தொடரப்பட்டன.
சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என புகார் வந்தது. சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சி டெண்டர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களுக்கு ஒதுக்கியதாக புகார் உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் அறப்போர் இயக்கம் வந்த புகார் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது.
