வருவாய்க்கு ஆதாரம்.. மதுவிலக்கு சாத்தியமாகவில்லை… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் மது விலக்கு என்பது இதுவரையில் சாத்தியமாகவில்லை என்றும் மது விற்பனையை ஒழுங்கு படுத்த மட்டுமே பல்வேறு விதிகள் மற்றும் உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து வருவதாக ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் உரிமம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அதிமுக சார்ந்த முடிவுகள்… சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!!!

அந்த மனுவில் டெண்டர் இறுதி செய்யப்படும் நிலையில் நில உரிமையாளர்கள் குத்தகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை என்று மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இதனிடையே மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் பார் அமைப்பதில் நில உரிமையாளர்கள் ஒப்புதல் பெறுவது அவசியம் என்றும் டெண்டர் அறிவித்தற்கு முன்பே தடையில்லா சான்றிதல் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

22% வரை ஈரப்பத நெல் கொள்முதல்: தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்..!!

அதே போல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கூறிய நீதிபதி வருவாய்க்கு ஆதாரமாக இருப்பதால் மதுவிலக்கு சாத்தியமாகவில்லை வில்லை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மாதம் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment