
Tamil Nadu
மாணவர்களே கொஞ்சம் உஷாரு; பொதுத் தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டுக்கு தேர்வெழுத தடை…!!
நாளை மறுநாள் நம் தமிழகம் முழுவதும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்காக தற்போது அரசு தேர்வு இயக்ககம் சார்பில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அதுவும் குறிப்பாக தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் என யாரும் அலைபேசி கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
விடைத்தாள் மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவ தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் மட்டுமில்லாமல் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் காப்பி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்து ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் அந்த பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
