கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள நிறுவனங்களுக்கு சீல் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆஜர் ஆகி இருந்தார்.
அப்போது பேசிய அவர் இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்துவதாகவும் இதுவரையில் 1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வெறும் அபராதம் விதிப்பதினால் மட்டும் தீர்வு ஆகாது என்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள நிறுவனங்களை சீல் வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த பணிகள் அனைத்தும் ஏப்ரல் 9- தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.