தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் தடை! தமிழக அரசு அறிவிப்பு;

இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுவென்று செய்யப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் பட்டாசு வெடிப்பது குறித்து கால நேரமும் விதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு

நம் சென்னையில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த வகையான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று கூறப்படுகிறது. ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில் இத்தகைய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. பேரியம் கலந்த பட்டாசுகளை ஓரிடத்தில் சேமிக்கவும், வேறு இடத்துக்கு கொண்டு செல்லவோ கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறி முறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment