Entertainment
பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
பிரபல பாலிவுட் பாடகி பாலாக் முச்சல் அவர்களுக்கு போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஒருவரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பாடகி பாலாக் முச்சல் அவர்களுக்கு கடந்த சிலநாட்களாக போன் அழைப்பும் அதில் உங்களை சந்திக்க வேண்டும் என்று அருவருப்பான வார்த்தைகளுடன் ஒரு மர்ம நபர் பேசிய்ள்ளார். மேலும் அவ்வப்போது ஆபாசமான வார்த்தைகளுடன் கூடிய எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் தெரிகிறது
இதுகுறித்து பாடகி மும்பை போலீசாரிடம் புகார் அளிக்க இந்த புகாரின் அடிப்படையில் பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நடந்த முதல்கட்ட விசாரணையில் பீகாரில் உள்ள கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் என்றும் அவருக்கு வயது 30 என்றும் தெரியவந்தது. அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
