Connect with us

ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ‘விஜய் 66’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் !!

vijay

பொழுதுபோக்கு

ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ‘விஜய் 66’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் !!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் விஜய் 66 படத்தில் கமிட் ஆகி தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே நடிகை ராஷ்மிகாவிற்கு  நல்ல மார்க்கெட் இருக்கும் நிலையில் இப்படம் பெரிய அளவில் வெற்றியடையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Rashmika

இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஆக்‌ஷன், காதல்,செண்டிமென்ட் இருக்கும் என தயாரிப்பாளர் ராஜூ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தளபதி 66 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்தக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்குவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக வெங்டேஸ்வரா கிரியேஷன் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top