சர்தார் படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதத்தில் இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் கார்த்திக். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் வெளிவந்த சர்தார் படமானது வசூலில் பம்பர் ஹிட் கொடுத்தது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ படத்தினை விட இப்படமானது வசூலில் மாஸ் காட்டியது.
இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் லட்சுமண் குமார் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
ஏற்கனவே விக்ரம் படத்தின் சாதனைக்காக இயக்குனர் லோகேஸ்க்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.