என்னுடைய முதல் தோல்விப்படம் மணிரத்னம் படம்தான்.. அவருக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு.. பிரபல தயாரிப்பாளர்..!

தமிழ் திரையுலகில் கடந்த எண்பதுகளில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வந்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி. இவர் தயாரித்த முதல் படமான ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை செய்தது.

இதன் பிறகு ‘இளமை காலங்கள்’, ‘நான் பாடும் பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’ என ஐந்து வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி என கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டது. ஆனால் அவரது தயாரிப்பில் உருவான முதல் தோல்வி படம் என்றால் அது மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இதய கோவில்’ என்ற படம்தான்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

idhaya kovil

அப்போது உச்சத்தில் இருந்த மோகன், ராதா, அம்பிகா ஆகிய மூன்று பேர் இந்த படத்தில் நடித்திருந்தும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘என்னுடைய முதல் தோல்வி படம் இதய கோவில் திரைப்படம்தான், மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே என்னுடைய தவறு’ என்று பின்னாளில் கோவைத்தம்பி பேட்டி அளித்திருந்தார்.

உண்மையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக இருந்திருக்க வேண்டியது என்றும் ஆனால் மணிரத்னம் எதை படமாக்க வேண்டும், எதை படமாக்க கூடாது என்று தெரியாமல் அதிகமான காட்சிகளை படமாக்கி விட்டார், இந்த படத்திற்காக எனக்கு மூன்று படத்தின் செலவு ஏற்பட்டது, என் பொருளாதாரத்தை நசுக்கியது என்றும் கோவைத்தம்பி தெரிவித்து இருந்தார்.

idhaya kovil1

சரியான காட்சிகளை, தேவையான காட்சிகளை மட்டும் அவர் படமாக்கி இருந்தால் இந்த படத்திற்கான செலவு குறைந்திருக்கும் என்றும் அப்போது இந்த படம் வெற்றி பெற்று இருக்கும் என்றும் அவர் மணிரத்னம் மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?

இந்த படத்தின் வசூல் ஓரளவு சுமாராக இருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான் என்று சொல்லலாம். ‘இதயம் ஒரு கோவில்’, ‘யார் வீட்டில் ரோஜா’, ‘கூட்டத்திலேயே கோயில் புறா’, ‘பாட்டு தலைவன்’, ‘நான் பாடும் மௌன ராகம்’, ‘வானுயர்ந்த சோலையிலே’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

ilaiyaraja

அதுமட்டுமின்றி ‘இதய கோயில்’ படத்திற்கு பிறகுதான் கோவைத்தம்பி நிறுவனத்திற்கு இறங்குமுகம் ஏற்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இளையராஜாவுக்கும் கோவைத்தம்பிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது என்றும் அதற்கு ஒரு முக்கிய காரணம் மணிரத்னம் என்றும் கோவைத்தம்பி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த படத்திற்கு பின்னர் கோவைத்தம்பி மற்றும் இளையராஜா பிரிந்தனர். இதனை அடுத்து கோவைத்தம்பி தயாரித்த ‘உயிரே உனக்காக’, ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’, ‘மண்ணுக்குள் வைரம்’, ‘மங்கை ஒரு கங்கை’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தது.

idhaya kovil2

இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு இளையராஜா உடன் சமரசம் செய்து, அதன் பிறகு இவர் தயாரித்த ‘செம்பருத்தி’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார்.

இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

கோவைத்தம்பியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருந்த மணிரத்னம், ‘இந்த படம் எனக்கு திருப்தி இல்லாத படம் என்றும் இந்த படத்தால் எனக்கு கிடைத்த ஒரே நன்மை என்னவென்றால் ‘மௌன ராகம்’ என்ற எனது அடுத்த படத்திற்கு டைட்டில் கிடைத்ததுதான்’ என்றும் கூறியிருந்தார். இவ்வாறு தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு மத்தியில் உருவான இதய கோவில் படம் வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...