திரையுலகமே அதிர்ச்சி!! தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைவு…!!

தமிழ் சினிமாவில் அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் முரளிதரன் மரணம் அடைந்துள்ளதாக தகவல்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே திரை பிரபலங்கள் மரணம் அடைவது வழக்கமாக
இருந்து வருகிறது.அந்த வகையில் புதுப்பேட்டை, பகவதி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் முரளிதரன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மற்றும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவராக முரளிதரன் இருந்துள்ளார்.

இந்த சூழலில் கும்பகோணம் கோயில் ஒன்றில் சாமியை தரிசனம் செய்வதற்காக சென்ற அவர் மதியம் 1.30 மணியளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இத்தகைய செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாளைய தினத்தில் சென்னையில் இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.