
பொழுதுபோக்கு
மீண்டும் தயாரிப்பாளரான தனுஷ்! கையில் உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போழுது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் திருச்சிற்றம்பலம் படம் இந்த மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.
அதை தொடர்ந்து அவரது அண்ணனும் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். வி க்ரியேஷன் கலைப்புலி எஸ். தாணு படத்தை தயாரித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கயுள்ளார்.
அடுத்து படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ் மீண்டும் தாயாரிப்பில் களமிறங்கியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தனுஷ் இறுதியாக தயாரித்துள்ள படம் ரஜினி நடித்த காலா, 2018 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
120 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட இந்த படம் தனுஷிற்கு நஷடத்தை ஏற்படுத்தியது, அதன் பின் சில காலங்களாக அவறிந்தாரிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் தற்போழுது மீண்டும் தாயாரிப்பில் களமிறங்கியதாகவும் அதற்காக ஆபிஸை நுங்கப்பாக்கத்தில் இருந்து omrக்கு மாற்றியுள்ளார் தனுஷ்.
குட்டி டிரஸ் போட்டு குழந்தை போல பிறந்தநாள் கொண்டாடிய யாஷிகா! வைரல் வீடியோ!
மேலும் மூன்று படங்களை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.முதலில் இலன் படம், அடுத்ததாக மாரி செல்வராஜ் படம், வெற்றி மாறன் போன்ற படங்களை கையில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது, அதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும்.
