உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! டெல்லி திரும்பிய விமானம்; தமிழர்கள் தவிப்பு!
இன்று உலக நாடுகளை அச்சத்தில் உள்ளனர். தற்போது ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் மீது போர் தொடுத்து கொண்டு வருகிறது. அதனால் அங்கு குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் உக்ரைனுக்கு சென்ற இந்திய விமானம் திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரம் சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் போர் தொடங்கியதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. இந்திய விமானம் மீண்டும் திரும்பியதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனில் இருந்து செய்யப்படும் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவம் போர் தொடுத்த நிலையில் உக்ரைனில் உள்ள அனைத்து இணையதளங்களும் மெல்லமெல்ல முடக்கப்பட்டு வருகிறது.
உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனில் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
