தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணம்.. நடிகர் அருண் விஜய் ஓப்பன் டாக்!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வாரிசு நடிகராக இருந்து வருபவர் அருண் விஜய். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த சினம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஜ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ‘ நாம கொடுக்குற ரத்த 4 பேரின் உயிரை காப்பாத்துவதால்.. ரத்த தானம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதே போல் பிரியாவின் மரணம் என்பது ஒரு சில கவன குறைவால் நடைப்பெற்றதாகவும், வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.