பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா: இன்னொரு அர்ச்சனா ஆவாரா?

485378ab0004d12e796f8902821fb379

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல ஆர்ஜே பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜீ டிவியில் ஆர்ஜேவாக இருந்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரையும் கெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் புகழையும் பெற்றிருக்கும் பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குச் சென்று தன் பெயரை கெடுத்துக் கொள்வாரோ? என்ற அச்சம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் கனி, சூசன், சுனிதா, கோபிநாத் ராஜ் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.