தமிழ் சினிமாவில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன், ரசிகர்களின் மனதை குறுகிய காலத்தில் வெகுவாக கொள்ளை கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் தலைவர் 169 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பிரியங்கா மோகன் சமீபத்தில் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் செம கியூட்டாக நடித்திருந்தார்.
மேலும் தளபதியின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கயுள்ள நிலையில் அந்த படத்தில் வில்லியாக சமந்தா நடிக்க படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்த்தப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் பிரியங்கா மோகன் ஓய்விற்காக தற்போழுது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் லண்டன் சென்றுள்ளார்.
லண்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும் தற்போது பாரிஸ் நகரில் ஈபில் டவர் முன் எடுக்கப்பட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மதிப்பளிக்கும் சிறப்பு விருது – விருதை பெற்றது யாரு தெரியுமா?