ஜெயம் ரவியின் 30வது படத்தில் டாக்டர் பட ஹீரோயின்! கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் ஜெயம் ரவியின் 30வது படமான ஜேஆர் 30 (தற்காலிக தலைப்பு) நடித்து வருகிறார், சிவா மனசுல சக்தி பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி இயக்குனர் எம். ராஜேஷ் மற்றும் ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு பேனருடன் படம் உருவாகிறது. நேற்று இந்த படத்தின் பூஜை நடைபெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகபிரியங்கா மோகன் நடிக்கிறார்.

JR 30 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 12, 2022 அன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவின் வாகமனில் தொடங்குகிறது.படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், இது அண்ணன்-தங்கை பாசத்தைப் பற்றிய படம் என்று கூறப்படுகிறது.

download 8

இந்தப் படத்தில் நட்டி என்கிற நடராஜன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், இரண்டாம் முறையாக ஜெயம் ரவி இணைந்து பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகயுள்ளது. படமும் செப்டம்பர் 15 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் , டான் படத்தில் நடித்துள்ளார். டாக்டர் படத்தில் இவர் நடனமாடிய செல்லம்மா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

792869 1

அஜித்தின் 30 வருட சினிமா பயணத்தை பற்றிய ஒரு பார்வை!

தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தி நடித்துள்ளார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நடித்த 4 படங்களிலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரியங்கா மோகன் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.