டேஞ்சர் ஜோனில் பிரியங்கா: 4 போட்டியாளர்கள் எஸ்கேப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய ஒன்பது போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கிய நிலையில் இவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டு விட்டதாகவும், மீதி உள்ள ஐவர் டேஞ்சர் ஜோனில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஐவரில் ஒருவர் பிரியங்கா என்பது ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா ஆரம்பம் முதலே ஜாலியாக விளையாடி வருகிறார் என்றாலும் கடந்த சில நாட்களாக அவரது விளையாட்டு மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒருசில போட்டியாளர்களை அவர் டார்கெட் செய்து வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி அபிஷேக் உடன் அவர் நெருக்கமாக இருப்பதும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய சனிக்கிழமை நிகழ்ச்சியில் நாமினேஷனில் உள்ள ஒன்பது பேர்களில் 4 பேர் காப்பாற்றப்பட்டனர் என கமல்ஹாசன் அறிவிக்கிறார். அவர்கள் தாமரை, இசைவாணி, அக்ஷரா மற்றும் பாவனி ரெட்டி ஆகும். மீதி உள்ள ஐவரில் ஒருவர் நாளை வெளியேற்றப்படுவார் என்றும் கமலஹாசன் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மீதி உள்ள ஐவரில் யார் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற நிலையில் அதில் பிரியங்காவும் ஒருவராக இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment